March 09, 2020

பெரிமா வீடு

யாராவது என்னிடம் எந்த சொந்தகாரங்க வீட்டுக்கு போக பிடிக்கும்னு கேட்டா சந்திரா பெரிம்மா வீடுனு சொல்லுவேன். அவங்க வீடு விருதுநகர்ல பழைய பர்மா கடைக்கு oppositela இருக்கு. பழைய பர்மா கடைனு சொன்னா யாருக்கும் இப்ப அடையாளம் தெரியாது, முத்துராம்பட்டி bridgegukku கீழ இருக்கு.

வாரம் வாரம் சனிக்கிழமை  தவறாம அம்மா அங்க கூட்டிட்டு போயிருவாங்க. எனக்கு பத்து வயசு ஆகுற வரைக்கும் அம்மா என்ன  இடுப்புல தூக்கிட்டு தான் போவாங்க, எனா நான் நடக்க dimikki குடுப்பேன் 😉.  மதியம் 2.30 க்கு மேல வாடியான் தெருல இருக்குற ஐயம்மா  வீட்டுல இருந்து கிளம்பி போவோம். அந்த நேரம் வெயில் சரியா கொளுத்தி முடிச்சு கொஞ்சம் குறைஞ்ச நேரமா இருக்கும். போகும் போது வாடியான்  கேட் பக்கத்துல இருக்குற கடைல Rose Mint, Poppins இல்ல Lollipop வாங்கி குடுப்பாங்க அம்மா . சில நாள், Pepsiனு சொல்ற அந்த குட்டி refrigirator la வச்ச tube சைஸ் ல இருக்குற ஜூஸ் பாக்கட்டை வாங்கி குடுப்பாங்க.



பெரிம்மா வீடு, அவுங்க சொந்தக்காரங்க சேர்த்து இருக்குற compound வீட்ல ஒன்னு. முன்னாடி கேட் வழியா போனா அவுங்க compoundla இருக்குற நாய் குறைச்சுகிட்டே  பின்னாடியே வரும், அதுக்கு பயந்து நானும் அக்காவும் அம்மா சேலைய பிடிச்சுக்கிட்டே அவுங்கள ஒட்டியே நடந்து போவோம். பெரிமா வீட்டுக்கு போனவுடனே அவுங்க  Rasna போட்டு தருவாங்க. நானும் அக்காவும் tv முன்னாடி உட்கார்ந்திருவோம், அம்மாவும் பெரிமாவும் dining hallukku உள்ள போய் பேச ஆரம்பிச்சுருவாங்க. Default ஆ remote எடுத்தோனே என் மூளை  cartoon channela தான் தேடும். அக்கா வேற சேனல் வைக்கனும்னு  சண்டை போடுவா, நான் விட்டு குடுக்க மாட்டேன்.
அப்படியே niceஆ வெளிய போய் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பூ செடில பூ பறிக்க போயிருவா. கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கிகிட்டு இருக்குற  பெரிப்பா வெளிய வந்து பேசுவார், அப்புறம் வெளிய போயிருவார். கொஞ்ச நேரத்துல TV bore அடிச்சுரும்.


நானும் பின்னாடியே போய் என்ன தான் அக்கா செய்றானு வெளிய  வந்துருவேன். நான் ஒரு பக்கம் சீதா பழ செடில heighta தொங்கிகிட்டு  இருக்குற சீதா பழத்தை கல் அடிச்சு எடுக்க try பண்ணிட்டு இருப்பேன். பெரிம்மா பழத்தை பறிக்க வச்சிருந்த கம்பியை எடுத்து பறிச்சு தருவாங்க. பின்ன மாடிக்கு போய் ஊஞ்சல்ல விளையாடுவோம் நானும் அக்காவும். அதுவும் bore அடிச்சோனே, வீட்டுக்கு பின்னாடி இருக்குற மாட்டு பன்னைக்கு போய் நான் மாட்டையும் கோழியையும் வேடிக்கை பாத்துட்டு வருவேன் . திரும்பி வரும்போது பெரிம்மா சூட சுசியமும் பஜ்ஜியும் வாங்கி வச்சிருப்பாங்க. அத சாப்பிட்டுட்டு திரும்பி tv பாக்க உட்கார்ந்திருவோம்.


கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சுரும், பெரிம்மா கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் போகனும்னு சாப்பாடு எடுத்து வைப்பாங்க. நான் எப்பவும் பால் சோறும் ஊறுகாயும் தான் விரும்பி சாப்பிடுவேன், அவுங்க செஞ்ச ஊர்கா எப்பவுமே superஆ இருக்கும்.
சாப்ட்டுட்டு interesting ஆஹ் tv பாத்துட்டு இருப்போம். 7 மணி பக்கம் ஆன உடனே வீட்டுக்கு போகணும்னு அம்மா ஆரம்பிச்சுருவாங்க. கிளம்ப மனசே இருக்காது, திட்டி இழுத்திட்டு போவாங்க !