March 01, 2020

ரேடியோ

நான் சின்ன வயசுல ரொம்ப  ஆசைப்பட்டு  செஞ்ச ஒன்னு - FM ரேடியோ கேட்டது. எங்க வீட்ல பொழுது போக்குக்கு இருந்தது black & white TV மட்டும் தான், அதுவும் DoorDarshan channel மட்டும் தான். அப்ப தான் FM radio வ  ஒரு விளையாட்டு சாமானாக வாங்கி குடுத்தாங்க எங்க அப்பா அம்மா.
ஆனா அது எனக்கு ஒரு full time entertainment ஆ மாறிடுச்சு.
முதல்ல AM station ல ஆரம்பிச்சது. காலைல ஸ்கூலுக்கு ரெடி ஆகும் போது ஓடும் - 2 பாட்டு 10 நிமிஷத்துக்கு மீதி 50 நிமிஷம்  advertisement. saturday மதியம் 3 க்கு, ஏதாவது ஹிட் ஆன  தமிழ் படத்தோட ஒலிச்சித்திரம் ஓடும். இந்தியா வுக்கு ஏதாவது கிரிக்கெட் மேட்ச் இருந்தா அந்த பொட்டி முழு நாளும் என் கைல தான் இருக்கும், commentary கேட்க. இங்கிலிஷ் commentary கேட்டு immitate பண்ணுவேன் 'The next ball has been lofted into the mid wicket square leg area, the ball lands between the player running square and player running backwards from point...'. schoolukku கூட திருட்டு தனமாக எடுத்துட்டு போய் score  கேட்டுருக்கேன்.



அப்புறம் வந்துச்சு இந்த FM ஸ்டேஷன் Suriyan FM, Radio Mirchi, HELLO FM. FM station ஓட jingles கேட்குறதுக்கே சூப்பரா இருக்கும். 
FM ஸ்டேஷன் la song ஓட artists சொல்லுவாங்க, அப்படி தெரிஞ்சுக்கிட்டது தான் தமிழ் songs oda singers யும் music director ம். அப்ப இருந்த  interestஆல தமிழ் songs artist ஓட database ah கரைச்சி குடிச்சுட்டேன். 1993-till  date release ஆன  தமிழ் song ஏதுவாது play பன்னா அதோட music director யாருனு கரெக்டா சொல்லிருவேன்.
மொட்டை மாடிக்கு போய் tune panna srilanka FM station எடுக்கும் , அப்ப அது எவ்வளவு பெரிய அதிசயமா பாத்தேன் தெரியுமா ?
Radio மாடல் advance ஆக ஆக ஒரு stage la tv sound receive aagura model வந்துச்சு. நியூஸ் , comedy time னு regulara வீட்டுல எல்லாருமே சில program கேட்போம். அந்த கொக்கரக்கோ கும்மாங்கோ கேட்காம யாருக்கும் தூக்கம் வராது.
2k era la இருந்த best entertaining electronic device. சுமார் அஞ்சு ஆறு வருஷம் entertainment உலகமே அது தான்னு இருந்தோம், டிவி இன்டர்நெட் வந்தோன்னே எல்லாமே மாறி போச்சு !