April 16, 2020

விருதுநகர் to திண்டுக்கல்

Trainla எத்தனையோ தடவ travel பன்னிருப்போம், but school days la Quarterly, Half-Yearly and Annual Exam லீவுக்கு போனது தான் எப்பவுமே ஞாபகமா இருக்கு.

Below is a recap of our train travels between Virudhunagar to Dindigul.

Amma : "7.45 ஆச்சே இன்னுமா auto வரல. ஐயா cycle ah உள்ள ஏத்திட்டாரா.."
Naan : "ஏத்திட்டாரு மா"
Ayya : "ஆட்டோ வந்துருச்சு கதவை பூட்டிட்டு சாவி எடு"
Mind la ellarukkum : Train la koottama irukka koodathu, utkaarrathukku idam kidaikkanum.
"டிரைவர் நிறுத்துங்க கொஞ்சம் , வட வாங்கிக்குறோம்".


ஸ்டேஷன் உள்ள போகும் போதே பாதி announcement கேட்கும்  "...aane ki sampaavana hai ...". டிக்கெட் எடுத்துட்டு உள்ள போய் பாத்தா ஐயோ என்ன இது இன்னைக்கு இவ்வளவு கூட்டமா இருக்கு.
Train announcmenta fulla கேட்டா train 1/2 hour late.

Akka : "மா பசிக்குது" Indha 1/2 hour kullaye akkavukku pasichirum.
"இந்தா இப்ப வட எடுத்து சாப்பிடு, train la ஏறிட்டு சாப்பிடலாம் ". அம்மா எப்பவுமே இட்லி இல்ல பால் சோறு pack பண்ணி எதுத்துட்டு வந்துருவாங்க.
கொஞ்ச நேரத்துல train வந்தோனே, seatல இடம் பிடிக்க அய்யா first ஏரிருவாரு, நாங்க பின்னாலயே போய் occupy பண்ணிக்குவோம். இடம் இருந்தும் சிலர் இடம் கொடுக்க மாட்டாங்க, அவங்கள்ட தான் அய்யா கறாரா பேசி பாத்துருக்கேன்.


ஒரு 45 mins la madurai வந்திரும். Train stationகு உள்ள வரும்போதே பாத்துட்டு இருப்போம் first platforma இல்ல  second platforma nu. அது ஒரு calculated எதிர்பார்ப்பு.
First platform na Meenakshi Bhavan second platform na Murugan இட்லி கடை. கண்டிப்பா ஏதாவது வாங்கிருவோம் , இட்லியோ, பூரியோ, பொங்கலோ, தோசையோ.

Ok, train கிளம்பிடுச்சு, breakfast ah முடிச்சுக்குவோம். Then starts all the stranger talks "நீங்க எங்க போறீங்க...நீங்க எங்க ஏறுனீங்க...அங்க யாரு வீட்டுக்கு போறீங்க..". அடுத்த கொஞ்ச நேரத்துல "எது எடுத்தாலும் 10 Rs" ஜடத்தோட பொழுது போயிட்டு இருக்கும் .

Train crossing போட்ட உடனே நான் comparment கதவோரம் போய் இந்த பக்கமும் அந்த பக்கமும் வேடிக்கை பாத்துட்டு இருப்பேன். "என்ன train இவ்வளவு நேரம் நிக்குது ஐயாவை தண்ணி பிடிச்சிட்டு வர சொல்லு ,train கிளம்புறதுக்குள்ள".

Add caption

Ah train கிளம்பிடுச்சு , அய்யா இன்னும் தண்ணி பிடிச்சிட்டு இருக்காரு. "ஐயோ வாங்க தண்ணி எல்லாம் வேணாம்." Train cross panni போகுது. நான் அம்மாட்ட ஓடி வந்து பதட்டமா சொல்றேன் "அய்யா வண்டில ஏறல". அம்மா சிரிப்பாங்க, திரும்பி பாத்தா அய்யா அடுத்த  compartmentல ஏறிட்டு வந்து surprise கொடுப்பாரு, அப்ப ஒரு  பெரு மூச்சு வரும்.


அடுத்த கொஞ்ச நேரத்துல Pineapple, வெள்ளரி பிஞ்சு, கல்லை பருப்பு, மணப்பாறை முறுக்கு nu வர்ற எல்லாத்தையும் வாங்கி சாப்டுட்டே வருவோம். ஒரு பக்கம் எனக்கு ஜன்னல் வழியா பாக்குறது full வேடிக்கை - train மலைக்குள்ள போகும், இருட்டாகும் , roadla போற  காரோட ரேஸ் போகும், மழை வரும், பச்சை பசேலுன்னு வயல் வரும், திராட்சை தோட்டம் வரும், பலாப்பழம் மரம்  இருக்குற ஸ்டேஷன் வரும்.



"அம்மா  இன்னும் திண்டுக்கல் வர எவ்வளவு நேரம் மா இருக்கு ".
"Kodai road போயிருச்சுல innum 15 mins la வந்துரும்".

Add caption
ஐ ஆச்சி வீடு, ஆச்சி அப்பா வெளில நின்னு டாடா காமிச்சாங்க. வந்துட்டோம் !